பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கல்வியாண்டு (2021-2022) இணையவழி பள்ளி பரிமாற்றுத்திட்டமாக செயல்பட்டது. நம் பள்ளியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) இரா.இரமேஷ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) செ.சரவணப் பாண்டியன் ஆகிய இருவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாவடிபட்டு க்கு சென்று நம் பள்ளியின் கற்பித்தல் செயல்பாடுகள், கற்றல் வளங்கள், மாணவர் மற்றும் ஆசிரியரின் கற்றல் கற்பித்தல் ஈடுபாடு போன்றவற்றினை காணொளி மூலமும் விளையாட்டு, கதை, புதிர் மற்றும் ஓவியங்கள் போன்றவற்றின் மூலமும் விளக்கி கூறப்பட்டது.
Pages
▼
19 Mar 2022
8 Mar 2022
' நம் பள்ளி நம் பெருமை ' தமிழ் ராப் பாடகர் அறிவு எழுதியுள்ள பாடல்.
' நம் பள்ளி நம் பெருமை '
தமிழ் ராப் பாடகர் அறிவு எழுதியுள்ள பாடல்.
இசை : கார்த்திக் தேவராஜ்
இயற்றிப் பாடியவர் : அறிவு
இயக்கம் : முத்தமிழ் கலைவிழி
இந்திய வரலாறு வரைபடம்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்திய வரைபடம்(வரலாறு) காணொளியை இங்கு காணலாம்.
பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - காலக்கோடு
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வரலாற்றுப் பிரிவில் ஐந்து மதிப்பெண்கள் பெறுவதற்கான காலக்கோடு பற்றிய காணொளியை இங்கு காணலாம் Click here.
"நான் முதல்வன்" நேரலை
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்த "நான் முதல்வன்" என்ற நிகழ்ச்சி, நம் பள்ளியின் Hi-tech Lab மூலமாக மாணவர்களுக்கு நேரலை செய்யப்பட்டது.
SMART BOARD மூலம் கற்பித்தல்.
கரடி சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் SMART BOARD
மூலமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடைபெறுகிறது.